கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர் சங்க புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தேர்தல் அறிவிப்பு கூட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர்களாக பேராசிரியர் கிருஷ்ணாகுமார், செல்வராஜ், ஆகியோர் செயல்பட்டனர். தலைவர், செயலர், பொருளாளர், துணை தலைவர், இணை செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகள் உட்பட 15 பேர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
புதிய தலைவராக அய்யலுசாமி, செயலாளராக கேசவன், பொருளாளர் விஜயன், துணை தலைவர்கள் ராஜாமணி, அய்யலுசாமி, துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணசாமி, நாகம்மாள். செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், லட்சுமணன், கிருஷ்ணசாமி, பால கிருஷ்ணன், சுந்தர்ராஜ், மாரியப்பன், ஹரிகரன், துரைராஜ், புதியதாக பதவி ஏற்றவர்களுக்கு கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.