மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி!

82பார்த்தது
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி!
புதூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது, மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் அருகேயுள்ள முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சித்ரஞ்சன் மகன் வேலு (55). எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மணிக்காரப்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினாராம். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி