மருந்து கடையில் ரூ. 3 ஆயிரம் திருடியவர் கைது!

63பார்த்தது
மருந்து கடையில் ரூ. 3 ஆயிரம் திருடியவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தனசுப்பு (50). இவர் வானரமுட்டி - கோவில்பட்டி சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவரது கடைக்கு வானரமுட்டி நடுத்தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சிங்கத்துரை (44) என்பவர் வந்துள்ளார். அவர் சில மருந்து, மாத்திரைகளை கேட்டுள்ளார். குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுக்க சந்தனசுப்பு கடைக்கு உள்ளே சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்த கடையில் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து சிங்கத்துரை ரூ. 3ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பி சென்று விட்டார். கடைக்குள் இருந்து மருந்து, மாத்திரைகளுடன் சந்தனசுப்பு திரும்பி வந்தபோது, சிங்கத்துரையை காணவில்லை. அப்ேபாது கல்லாபெட்டி திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் இருந்து ரூ. 3ஆயிரத்தை திருடி கொண்டு சிங்கத்துரை தப்பி சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து கடையில் கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவையும் அவர் ஆய்வு செய்து பார்தத்ததில் சிங்கத்துரை பெட்டியை திறந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சந்தனசுப்பு கொடுத்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து சிங்கத்துரையை கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ. 500-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி