திமுக அண்ணாவின் கட்சி கிடையாது: கடம்பூர் ராஜூ பேச்சு!

53பார்த்தது
திமுக அண்ணாவின் கட்சி கிடையாது: கடம்பூர் ராஜூ பேச்சு!
திமுக அண்ணாவின் கட்சி கிடையாது, கருணாநிதியின் குடும்ப கட்சி என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது "கோவை ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் - தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை நீங்கள் ஒதுக்கவில்லை. நாங்கள் இதை தோல்வியாக கருதவில்லை, திருக்குறள் மனிதனை வழி நடத்துவது போல அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் வழி நடத்துகின்றன.

நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணியில் இருந்த போதுதான், திமுக அண்ணாவின் கட்சி கிடையாது, கருணாநிதியின் குடும்ப கட்சி. தாமிரபரணி - வைப்பாறு நதியிணைப்பு திட்டத்திற்கு அரசாணை போட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் செயல்படுத்தாதது ஏன்? அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாத காலத்திற்குள் அதற்கான பணிகளை செய்து முடிப்போம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி