கயத்தாறு: மின்மாற்றி மீது கார் மோதி விபத்து; 3 பேர் காயம்

67பார்த்தது
கயத்தாறு: மின்மாற்றி மீது கார் மோதி விபத்து; 3 பேர் காயம்
கயத்தாறு அருகே மின்மாற்றி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் வந்த 3 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். நெல்லை மகாராஜ நகரை சேர்ந்தவர் பலராம் (27). இவரும், நண்பர்கள் 2 பேரும் நேற்று காலையில் மதுரையில் இருந்து நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். வடக்கு இலந்தைகுளம் அருகே திடீரென நிலைதடுமாறிய கார், முன்னால் சென்ற சமையல் எரிவாயு லாரி மீது மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது அங்கிருந்து மின்மாற்றி மீதும் கார் மோதி நின்றது. இதில் மின்மாற்றியும், காரும் பலத்த சேதமடைந்தன. மின்மாற்றியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. காரில் இருந்த 3 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து கயத்தாறு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி