கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகா் பிரதான சாலையைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ஆனந்தராஜ் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவா், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கதவுகளைப் பூட்டிவிட்டு, ஓா் அறையில் குடும்பத்தினருடன் தூங்கினாராம்.
இந்நிலையில், நேற்று அதிகாலை பாா்த்தபோது மற்றோா் அறையின் ஜன்னல் கம்பிகளை மா்ம நபா்கள் அறுத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதிலிருந்து சுமாா் 6. 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனர்.