தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான படிவங்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து கடம்பூர். செ. ராஜீ பேசுகையில் "டெல்லியில் இன்று ஒரு கட்சி (
பாஜக) ஆட்சியில் உள்ளது. நம்மால் தான் (அதிமுக) அடையாளாம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி யாரை கை காட்டுகிறறோ அவர் தான் பிரதமராக வர முடியும், 2024ல் இது தான் நடக்க போகிறது1989ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 11 எம். பிகளை வைத்து கொண்டு கை நீட்டி காரணத்தினால் தான் சந்திரசேகர் பிரதமராக வரமுடிந்தது.
இந்தியாவில் முதன் முதலில்
பாஜக அமைக்க காரணம் அதிமுக தான், அதிமுக 18 எம். பிக்கள் ஆதரவு அளித்த காரணத்தினால் தான் வாஜ்பாய் பிரதமராக வர முடிந்ததுஅதே வரலாறு வரும், அதை அவர்களாக (
பாஜக) கெடுத்து கொண்டார்கள்அந்த தலைவருக்கு (
அண்ணாமலை) வயசு இல்லை, பாக்குவப்படவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, வருத்தமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை என்று அந்த தலைவர் கூறியுள்ளார்