வழக்கறிஞர் சங்கத் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம்!

248பார்த்தது
வழக்கறிஞர் சங்கத் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம்!
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக பிரச்சனைகளால் இரண்டு சங்கங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் தொழிலின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இரு பிரிவுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தினை ஒன்றாக இணைத்து தேர்தல் வைக்குமாறு கோவில்பட்டி வழக்கறிஞர்கள் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


மேற்படி வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக இன்று 06. 10. 2023ல் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க நூலக கட்டிடத்தில் வைத்து கோவில்பட்டி வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்திற்கு பார்கவுன்சில் நிர்வாகிகள் அசோக் மற்றும் அய்யாவு ஆகியோர் தலைமை வகித்தனர்.


மேற்படி கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களின் கருத்துக்களும் கோரிக்கைகளும் பார்கவுன்சில் உறுப்பினர்களால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. இறுதியாக அடுத்த 2 நாட்களில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் அது சார்ந்த வழிகாட்டுதல்களும் பார்கவுன்சில் சார்பாக வெளியிடப்படும் என்று பார்கவுன்சில் சார்பில் அனுப்பப்பட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி