கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் ரிஷி (19). கோவில்பட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவரும், இவரது சகோதரரும் நேற்று முன்தினம் பசுவந்தனை பிரதான சாலை விலக்குப் பகுதியில் நடந்து சென்றபோது சாத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த மகேந்திரன் மகன் ஜெயசூர்யா (19), கீழ பாண்டவர்மங்கலம் தெற்கு காலனி சுரேஷ்குமார் மகன் கௌதம் (19) , கோவில்பட்டி கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் சிறுவன் ஆகியோர் சேர்ந்த இருவரையும் வழிமறித்து, சாலை ஓரத்தில் கிடந்த வேலி கம்பை எடுத்து அவர்களை தாக்கினராம்.
அவ்வழியேச் சென்றவர்கள் தட்டிக்கேட்டதால் 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனராம். இதில் காயமடைந்த ரிஷி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.