குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை!

77பார்த்தது
குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை!
எட்டையாபுரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வாழம்பட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா மனைவி முத்துச்செல்வி (25), இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முத்து விஜயா தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டாராம்.

இந்நிலையில், நேற்று கணவர் வீட்டுக்கு வந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலையத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் கோவில்பட்டி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார் வருகிறார்.

தொடர்புடைய செய்தி