பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

83பார்த்தது
பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம் இதைத்தொடர்ந்து ஆடி மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் பைரவர் சன்னதியில் ராகு காலத்தில் மாலை நான்கு முப்பது மணி முதல் 6 மணி வரை சிறப்பு பால் தயிர் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது

இதில் பைரவருக்கு எலுமிச்சை மாலை, வடை மாலை அரளி உள்ளிட்ட பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி