இரட்டை கொலை வழக்கு; 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

70பார்த்தது
இரட்டை கொலை வழக்கு; 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
க்ஷக்ஷதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே உள்ள மீன் கடையில் வைத்து கடந்த 07. 06. 2024 அன்று அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் வெள்ளத்துரை (49) மற்றும் கிழக்கு பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாராஜன் (எ) டீலக்ஸ் ராஜா (55) ஆகிய இருவரையும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில்,

இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துராஜ் (எ) கார்த்திக் (32), மந்தித்தோப்பு கணேஷ்நகர் பகுதியில் சேர்ந்த பால்சாமி மகன் மாரிராஜ் (32) மற்றும் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்த காளியப்பன் மகன் சேர்மக்கனி (30) ஆகிய 3 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமுருகன் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி