கோவில்பட்டி: திருக்குறள் ஒப்பித்து 2½ வயது சிறுவன் அபார சாதனை

57பார்த்தது
கோவில்பட்டி: திருக்குறள் ஒப்பித்து 2½ வயது சிறுவன் அபார சாதனை
கோவில்பட்டியை சேர்ந்த மு. சூர்யகுமார்-குருராம காயத்ரி தம்பதியரின் மகன் சுதர்ஷன் முத்ரன். (வயது 2½) சூர்யகுமார் கோவையில் தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார். குருராம காயத்ரி சத்து மாவு தயாரிக்கும் சுய தொழில் செய்து வருகிறார். 2½ வயது முத்ரன் சிறுவர் பள்ளியில் படித்து வருகிறான். 

இவனது நினைவாற்றல் திறன் அபாரம் பிரமிக்க வைக்கிறது. அறிவுக்கூர்மையால் 30 திருக்குறள்களை மனப்பாடமாக வாசித்து பல இடங்களில் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான். மாவட்ட அளவில் "சக்ஸஸ் அகாடமி" நடத்திய ஆன்லைன் திருக்குறள் போட்டியில் முதல் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான். அதற்கு பின்னர் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், நெல்லை கற்பகவிருட்சம் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசும் பாராட்டுகளும் கிடைத்தன. 

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒரு முறை ஊர் பெயர் மற்றும் பிரபலமான பொருளின் பெயர் சொல்லி தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணனிடம் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான். இரண்டாவது முறை திருக்குறள் கூறி ஞானத் தமிழ்ச் செல்வர் பேராசிரியர் முனைவர் வே. சங்கரநாராயணன் அவர்களிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றான்.

தொடர்புடைய செய்தி