மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

65பார்த்தது
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தி மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்கள் உதவிகளை கண்காணிக்கவும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி