சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் என்ற விஷயத்தை பலரும் கேள்விப்பட்டு இருப்போம். அதாவது, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எளிமையான, அனைவரும் உலகளவில் பயன்படுத்தும் அடையாளத்துக்குள் குறிக்கும் குறிச்சொல் ஹேஷ்டேக் என அழைக்கப்படுகிறது. ஆனால், '#' என்பதன் உண்மையான பெயர் ஆக்டோதோர்ப் ஆகும். ஆக்டோதோர்ப் என்ற சொல் 1960களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின் சோஷியல் மீடியாக்கள் அதிகரித்தபின்னர் Hashtag என்பது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு, இன்று அனைவருக்கும் பரிச்சயமான விஷயமாகியுள்ளது.