உலகில் சுமார் 3.9 லட்சம் தாவரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பண்புகள் இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் அதிகம் காணப்படும் மூங்கில் உலகில் உள்ள தாவரங்களில் ஒரே நாளில் அதிகம் வளரக்கூடிய தன்மையை கொண்டது ஆகும். இது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 91 செமீ வரை வளரும். மூங்கிலின் வேர்த்தண்டு கிழங்கு அமைப்பில் இருப்பதால் மூங்கில் விரைந்து வளருகிறது. மூங்கிலின் வேர் அமைப்பு நீர், ஊட்டச்சத்துக்களை விரைவாக உறிஞ்சி வளர்ச்சியை உறுதி செய்கிறது.