சென்னையில் நடைபெற்றுவரும் திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜக-வின் செயல்திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள். அளவில்லால் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராடி, வெற்றி பெற வேண்டும்" என்றார்.