வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமித்ஷா தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித்ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை” என பதிலளித்துள்ளார். முன்னதாக மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது?” என கேள்வி எழுப்பியிருந்தார்.