பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி இது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். "ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பேசினார். கல்லூரிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்தவனை கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்தும் போது மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள்" என வினவினார்.