திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் இவர் காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி அரசு பள்ளி ஆசிரியர். இவர்களுடைய மகன் மணிகண்டன் பிரபு துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.
மகனுக்காக பள்ளி அருகே பெற்றோர்கள் வீடு வாடகைக்கு பார்த்து வைத்துள்ளனர். பெற்றோர்கள் நேரம் கிடைக்கும்போது துறையூரில் மகனுடன் தங்கி செல்வார்களாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டின் ஹாலிலும் மணிகண்டன் பிரபு தனி அறையிலும் உறங்கினாராம். மறுநாள் விடிந்து பார்த்தபோழுது மணிகண்டன் பிரபு தனது தாயின் சேலையில் மின்விசிறியில் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து துறையூர் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.