திருவிடைமருதூர் சாலை விபத்தில் கணவன் மனைவி பலி

1530பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சம்பந்தம் மகன் செல்வராஜ் (70). இவரது மனைவி நீலா (65). இவர்கள் இருவரும் நேற்று இரவு சந்தையில் காய்கறி வாங்கிவிட்டு திருவிடைமருதூர் மின்சார வாரிய அலுவலகம் வழியாக டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த திருவிடைமருதூர் மணவெளி தெருவை சேர்ந்த துரையப்பன் மகன் பாலாஜி (28) என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீதும் மோதியதில் தலையில் காயம் அடைந்தனர்.

பின்னர் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தபோது செல்வராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்துவிட்டார். இதில் நீலா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் அய்யம்பேட்டை அருகே செல்லும் போது நள்ளிரவு 1 மணிக்கு வழியிலேயே உயிர் பிரிந்தது. பின்னர் இருவரின் பிரேதமும் கும்பகோணம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டு சவக்கிடங்கில் உள்ளது.

தொடர்புடைய செய்தி