திட்டாணிமுட்டத்தில் காத்திருப்பு போராட்டம்

81பார்த்தது
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே முசிறியம் ஊராட்சிக்கு உட்பட்ட திட்டாணிமுட்டம் கிராமத்தில் பழமை வாய்ந்த கூத்தையனார் கோவில் அமைந்துள்ளது.

கிராமத்திற்கு பொதுவான இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆலயம் வைகாசி மாதம் விசாக நட்சத்திர அன்று ஒவ்வொரு வருடமும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களை திருவிழாவில் பங்கேற்க அப்பகுதி மக்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் மனு அளித்தும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும் நிலையில்
பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் திருவிழா நடத்த முடிவு செய்து உள்ள நிலையில் "தங்களையும் திருவிழாவில் அனுமதிக்க கோரியும் கோவில் நிர்வாகத்தில் தங்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு கருதி கிராமம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளதால் அப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரியதீர்வு ஏற்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை அரசுக்கு விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி