திருவாரூர் நகரா ட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் விளமல், தண்டலை, தேவர்கண்டநல்லூர், புலிவலம், பெருந்தரக்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மக்கள் மீது வரி சுமை ஏற்றப்படும் எனவும், மேலும் விவசாயத்தைச் சார்ந்த இப்பகுதி மக்களின் 100 நாள் வேலை போன்ற வேலை வாய்ப்புகளும் பறிக்கப்படும் என குற்றம் சாட்டி கிராம மக்கள் இந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெருந்தரகுடி பேருந்து நிறுத்தம் முன்பாக அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இனைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.