நேற்று மாலை தொடங்கி இரவு வரை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருவாரூர் அருகே சிங்களஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் உயரமான தென்னை மரம் ஒன்றில் இரவு மின்னல் தாக்கியது. இதில் பச்சை தென்னை மரத்தின் ஓலைகள் தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் எரியும் தென்னை மரத்தில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. இதனை அவ்வழியாக சென்ற சிலர் செல்போனில் படம் பிடித்து தற்போது வெளியிட்டுள்ளனர். மின்னல் தாக்கி பச்சை தென்னை மரம் தீப்பிடித்து எரியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகிறது.