திருவாரூர் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உலாமாக்கள் அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும் சமயப்பணி ஆற்றுவதற்கு புதிய இரு சக்கரவாகனங்கள் வாங்க ரூ25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எதுகுறைவோ, அத்தொகை வழங்கிடஅரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இருசக்கரவாகனம் புதியதொழில்நுட்பத்துடன் இஞ்சின் 125 சி. சி சக்திக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 1. 1. 2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களின் மனுதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்கவேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல், 18லிருந்து 45 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கரவாகனம் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.