தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவருக்காக 'சிறகுகள்' என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 5 சதவீத குறைந்த வட்டியுடன் சுய தொழில் மற்றும் சிறு வணிகம் போன்ற தேவைகளுக்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை கடன் பெறலாம். 36 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் இந்தக்கடனுக்கு சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.