கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது

83பார்த்தது
கூத்தாநல்லூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது
கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் வெர்ஜினியா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கூத்தாநல்லூர் பகுதியில் சுற்றி திரிந்த நபர்களிடம் விசாரணை செய்த போது கூத்தாநல்லூர் மேலதிருவை சேர்ந்த சசிகுமார் நசீரா தெருவை சேர்ந்த சபரி ராஜன், இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். இதே போல் அதங்குடி ஜீவா தெருவை சேர்ந்த பூவரசன் என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி