திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற விரும்புவோர் குடும்ப ஆண்டு வருமானம் நகர் பகுதி மற்றும் கிராம பகுதியில் உள்ளவர்கள் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது. கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவிகிதம், பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் கடனாக வழங்கப்படுகிறது.