வீட்டு மனை பட்டா வழங்ககோரி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்

6126பார்த்தது
கூத்தாநல்லூர் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சேகரை கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்க்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சேகரை வருவாய் கிராமத்தில் நில எடுப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடன் வழங்க வலியுறுத்தியும், முன்னாள் முதல்வர் பெயரில் கலைஞர் நகர் என்று சேகரை கிராமத்தில் வைத்த பெயர் பலகையை அகற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேகரை கிராமத்தில் அரசு அதிகாரிகள் சட்டவிரோத நபர்களுக்கு துணை நீ போதை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி