திருவாரூரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் புரட்டாசி மாதத்திலும் இலவச பிரியாணி வாங்க அலை மோதிய அசைவ பிரியர்கள்.
திருவாரூர் நகர் பகுதியில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் நேற்றைய தினம் புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்து அக்கடைக்கு அசைவ பிரியர்கள் படையெடுத்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மக்களுக்கு டோக்கன் வழங்கி வரிசையில் வரும்படி அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர். புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் இலவசம் என்ற கடையின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் எதையும் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் சென்றனர்.