தமிழக அரசு கண்டித்து ஏ. ஐ. டி. யு. சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
திருவாரூரில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி சம்பளம் வழங்க வலியுறுத்தி AITUC சங்கத்தினர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவாரூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றக்கூடிய கிராம மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குவிப்பாளர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளையும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி சம்பளம் வழங்க வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
காத்திருப்பு போராட்டத்தில் கிராம உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சாந்தகுமார் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி