மன்னார்குடி அருகே மேலவாசல் கிராமத்தில் திருமுருகன் தொடக்கப்பள்ளி, இல்லம் தேடி கல்வி மையத்தில் 2024ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாணவர்கள் புத்தகங்களுடன் 2024 புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வஜ்ரசிங் தலைமையில் இன்று நடைபெற்றது. தன்னார்வலர் சாவித்திரி வரவேற்றார்.
இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.