கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் வார்டு எண் 23 அக்கரைப்புதுதெரு பொதுமக்கள் பண்டுதகுடி (மாந்தோப்பு) என்ற முகவரியில் ஜெயஸ்ரீ என்பவர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நகராட்சி அனுமதி இன்றி 30 நாய்கள் வீட்டில் வளர்ப்பதால் நாய்கள் தெருவில் திரிவதாலும் அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவரிடமும் ஆணையரிடமும் புகார் மனுவை அளித்தனர். அதன் பேரில் நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையர் அறிவுரையின்படி இன்று சுகாதார ஆய்வாளர் பொதுமக்களுடன் நேரில் ஆய்வு செய்து பொது சுகாதார சட்டத்தின் படி அறிவுரை வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.