கிருபாசமுத்திர பெருமாள் திருக்கோயிலின் மஹாசம்ப்ரோக்ஷண யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கி நடைப்பெற்று வருகின்றன.
வைணவ தலங்களில் 11வது திருத்தலமும், திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டகோயிலும், கருடனுடன் ஏற்பட்டபகையால் தன்னை காத்துக்கொள்ள ஆதிசேஷன் பெருமாளை சரணாகதி அடைந்து பெருமாளின் அருளை பெற்ற தலமும் , பாலரங்கநாதராக தெற்குதிசை நோக்கி அருள்பாலிக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் மாவட்டம் சிறுபுலியூரில் அருள்மிகு தயாநாயகி தாயார் சமேத கிருபாசமுத்திர பெருமாள் திருக்கோயிலின் மஹாசம்ப்ரோக்ஷண யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கி நடைப்பெற்று வருகின்றன.
இரண்டாம் நாளான இன்று மூன்றாம் கால யாகபூஜைகள் நடைப்பெற்றன.
யாகத்தில் பல்வேறு வகையான , வேதிகை பொருட்கள், பட்டுப்புடவை சமர்ப்பிக்கப்பட்டு பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.