கோவில் திருமாளம் மகாகாளநாதசுவாமி ஆலயத்தில் வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோம யாக விழா நடைபெற்று வருகிறது. தனது அடியார் வேண்டுகோளின் படி அவர் நடத்திய யாகத்திற்கு திருவாரூரில் கோயில் கொண்ட தியாகராஜ சுவாமி இறந்த கன்றை தோளில் சுமந்து, நான்கு நாய்களுடன், மத்தளம் வாசித்துக் கொண்டு் நீச்சன்(வெட்டியான்) கோலத்திலும், அம்பிகை நீலோத்லாம்பாள் தலையில் மது குடம் சுமந்து வித்தியாசமான கோலத்தில் வந்து இறைவன் அவிர்பாகம் பெற்ற நிகழ்வான சோமயாக பெருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாத ஆயில்ய நட்சத்திரம் கொண்ட நாளில் சோமயாக விழா நடைபெறும் அதன்படி இன்று அருள்மிகு ஆனந்த தியாகராஜசுவாமிக்கு நான்கு வேதங்களை நான்கு நாய்களாகவும், இறந்த கன்றை தோளில் சுமந்தும், மத்தளம் இசைத்த கோலத்திலும் அம்பிகை நீலோத்லாம்பாள் மது குடம் தலையில் சுமந்து, வினாயகர், முருகன் ஆகிய சிறுவர்களை கையில் பிடித்தபடி் அலங்காரம் செய்யப்படும் காட்சிகொடுத்தார். சோடஷ உபச்சாரங்கள் நடைப்பெற்று தீபாரதனை நடைப்பெற்றது பின்னர் தியாகராஐசுவாமி, அம்பிகை, காட்சிகொடுத்தார் ஆலயத்தில் இருந்து்புறப்பட்டு சுவாமி பவளகால் மண்டப சப்பரத்திலும், மற்ற சுவாமிகளுடன் அம்பல் என்ற இடத்தில் சோமாசிமாற நாயனார்நடத்தும் சோமயாகத்திற்கு ஏழுந்தருளசெய்யப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் பூர்ணாஹூதி, தீபாரதனை நடைப்பெற்றது.