நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு

50பார்த்தது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிழிமிழலையைச் சோ்ந்தவா் ஆ. லட்சுமிபிரியா. இவா், 2023-இல் விபத்துக்குள்ளான தனது இருசக்கர வாகனத்தில் பழுது நீக்கம் செய்வது தொடா்பாக, வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில், புகாா்தாரரின் வாகன பழுது நீக்கம் செய்ததற்கான செலவுத் தொகை ரூ. 22,448 மற்றும் புகாா்தாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ. 30, 000, வழக்கு செலவுத்தொகை ரூ. 10,000 ஆகியவற்றை வழக்கு தாக்கலான நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென, வாகன காப்பீடு நிறுவனத்துக்கு கடந்த ஜனவரியில் நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படாததால், ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்று மனு, அளிக்கப்பட்டது. இந்த மனு விசாரணையில் இருக்கும் போதே, காப்பீட்டு நிறுவனத்தினா் இழப்பீட்டுத்தொகை 62,448-ஐ வழக்கு தாக்கலான நாள் முதல் வட்டித் தொகையை கணக்கிட்டு மொத்தம் ரூ. 65,990-ஐ வங்கி காசோலையாக, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வியாழக்கிழமை வழங்கினா். இந்த காசோலையை ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் ஆகியோா் புகாா்தாரரான லட்சுமிபிரியாவிடம் வழங்கினா்.

தொடர்புடைய செய்தி