தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையை ஏவிவிட்டு அடக்குமுறையை கையாலும் திமுக அரசை கண்டித்து அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய சிஐடியூ தொழிற்சங்கத்தினர் திருவாரூர் பெரியார் சிலை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் சாம்சங் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காகவும், சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், திமுக அரசு காவல்துறையை கொண்டு தொழிலாளர்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறையினை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய சிஐடியூ தொழிற்சங்கத்தினர் திருவாரூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருவாரூர் இரயில் நிலையத்தின் முன்பு திரண்ட தொழிற்சங்கத்தினர் திமுக அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக திருவாரூர் பழைய பேருந்துநிலையம் பெரியார் சிலை ரவுண்டானா பகுதியை அடைந்து அங்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறை கைது செய்தனர். சாலைமறியல் போராட்டத்தால் போக்குவாரத்து பாதிக்கப்பட்டது.