நன்னிலத்தில் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசுக்கு கோரிக்கை

64பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது முன் பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்த பிறகு தான் பெருமளவிற்கு விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவார்கள்.

ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என நம்பியே. நிலத்தடி நீர் போர்செட் மூலமாக முன்பட்ட குறுவை சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் சொல்லும்போது தற்போது விதைப்பு முறையில் குருவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்என்றும், குறுவை சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

ஜூன் 12-ம் தேதி தண்ணீர் மேட்டூரில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், குறுவைக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி