நீடாமங்கலம்-மன்னாா்குடி நெடுஞ்சாலையில் கொத்தமங்கலம் பாலம் பகுதியில் விபத்து தடுப்பு மற்றும் எச்சரிக்கை விளக்கு பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் -மன்னாா்குடி சாலையில் தட்டித்தெரு பகுதியிலிருந்து கொத்தமங்கலத்தை இணைக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள போக்குவரத்து பாலத்தின் வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பாலமும், நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே அந்த இடத்தில் நெடுஞ்சாலையில் தடுப்புகள் வைக்கப்பட வேண்டும். அத்துடன் சிகப்பு எச்சரிக்கை மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். மேலும், பாலத்தின் இருபுறமும் உயா்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். தேவைப்படும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.