இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் இன்று நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
தமிழக அரசு மின்சார கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,
மத்திய அரசு மின்சார சட்ட திருத்தம் 2020 ஐ திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு செயலாளர் எஸ். கேசவராஜ் தலைமையில் கோரிக்கைகளை விளக்கி கோ பழனிச்சாமி முன்னாள் எம்எல்ஏ மாநில கட்டுப்பாட்டு குழு, உலகநாதன் முன்னாள் எம்எல்ஏ மாநில நிர்வாக குழு, திருத்திரைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கா மாரிமுத்து மாநில நிர்வாக குழு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட சிறப்பு ராஜா , இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர்அருள்ராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா, மாணவர் மன்ற மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் , ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய நிர்வாக குழு, உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் பங்கு பெற்றார்கள்.