பழைய ஓய்வூதிய திட்டம் பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து போராட்டம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் இணைந்து கருப்பு சட்டை அணிந்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. நேற்று திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில். " பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருத்தம் செய்து அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். அரசு பணியாளர்களுக்கும் தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும். " உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து கோஷங்கள் எழுப்ப பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட தலைவருமான குணசீலன் சிறப்புரையாற்றினார். மேலும் டி. என். ஜி. எஸ். இ. யூ. மாவட்ட பிரதிநிதிகள் வேலாயுதம், குமார் மற்றும் மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது மற்றும் மாவட்ட வட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.