திருவாரூர்: தியாகராஜர் கோவிலில் பாத தரிசன விழா

79பார்த்தது
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு பாத தரிசனம் விழாவில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சைவசமயத்தின் தலைமை பீடமாகவும் பஞ்சபூத தலங்களில் மண்ணுக்குரிய ஸ்தலமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடிய தலமாக விளங்கும் பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் இன்று (ஜன 14) மார்கழி திருவாதிரை திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு அருள்மிகு தியாகராஜசுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

நடராஜபெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் நடராஜபெருமான் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முதல் அருள்மிகு தியாகராஜசுவாமி பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாததரிசனம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று தியாகராஜ சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 5 மணிவரை பாத தரிசனம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி