நெடுவாக்கோட்டையில் விநாயகர் சிலைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

73பார்த்தது
நாளை மறுதினம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது இதற்காக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வட மாநில தொழிலாளர்கள் திருவாரூர் அருகே நெடுவாக்கோட்டை பகுதியில் விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்காக வைத்துள்ளனர் சிலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கராஜன் மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் சிலை மாதிரிகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர் உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நாளைய தினம் முடிவுகள் வெளிவந்த பிறகு சிலைகளை விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி