திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில்
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிதர வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் , 430 ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் 920 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பணிக்கு வராததால் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும்
கணினி உதவியாளர்கள் மற்றும் தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பணிவரன் முறை படுத்தவேண்டும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்கள் மற்றும் ஜீப் ஓட்டுநர், பதிவரை எழுத்தர் அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து நிலை
காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.