தமிழ்நாடு பட்டதாரி, முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.
ஜிஎஸ்டி வரி மூலமாக மத்திய அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. முறையற்ற வகையில் மக்களிடமிருந்து எவ்வளவு வரி சுரண்ட முடியுமோ அவ்வளவு வரி சுரண்டப்பட்டு வருகிறது.
அதேபோல் அதானி போன்றோருக்கு பெருமளவில் கடன் வழங்கப்பட்டு, அவை வாரா கடனில் வைக்கப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு வரி சலுகை வழங்கப்படுகிறது என திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.