திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று 100க்கும் மேற்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் "தங்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது அதை அதிகப்படுத்த வேண்டும், சரியான பணிநேரத்தை கொடுக்க வேண்டும் தன்னார்வர்கள் என சொல்வதை தவிர்க்க வேண்டும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் எங்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு நேற்று இரவு முன்பதிவு செய்து ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள முற்பட்ட பொழுது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து மாவட்டம் முழுவதும் திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளார்கள் அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு திருவாரூரில் இருந்து சென்னை செல்வதற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் உங்களுக்கு தனியாக ரயில் பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ள வாருங்கள் என கூறி, ரயிலில் அமர்ந்திருந்த மருத்துவ ஊழியர்களை ஏமாற்றி அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.