கொரடாச்சேரி துணைக்காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் கொரடாச்சேரி கடை வீதியில் நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது காமராஜர் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து அவர் விசாரணை செய்ததில் தெற்குமாங்குடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பதும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து லாட்டரி நம்பர்கள் எழுதப்பட்ட சிறிய நோட்டு புத்தகம் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் 150 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.