சுந்தரகோட்டையில் தர்மசாஸ்தா அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா

85பார்த்தது
மன்னார்குடி அருகே சுந்தர கோட்டையில் உள்ள தர்மசாஸ்தா அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டை கிராமத்தில் பழமையான ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யனார் ஆலயம் உள்ளது. கோவில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் காலை ஆகசால பூஜையும் அதனைத் தொடர்ந்து மகாபூர்ணஆகுதி நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்று புனித நீர் உள்ள குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வளம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து தர்மசாஸ்தா அய்யனார், மாரியம்மன், நொண்டிகாமாட்சியம்மன் நொண்டி வீரன் பெரியாச்சி லாட சன்னியாசி காத்தவராயன் கருப்பண்ணசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி