கூத்தாநல்லூர் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது

79பார்த்தது
கூத்தாநல்லூர் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூடம் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் இன்று(அக்.04) நடைபெற்றது. ஆணையா் சித்ரா சோனியா, துணைத் தலைவா் மு. சுதா்ஸன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: மு. சுதா்ஸன் (துணைத் தலைவா்): நகராட்சி ஒப்பந்தங்களை திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் பொ. பக்கிரிசெல்வம் (திமுக): வெளியூா்களிலிருந்து ஒப்பந்தம் கோருபவா்களுக்கு பணி அளிக்கக் கூடாது.

இங்குள்ள ஒப்பந்ததாரா்கள் தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என கூறுகின்றனா். பொறியாளா்: ஒப்பந்தம் கோருபவா்களை நாங்கள் தடுக்க முடியாது. உள்ளூா் ஒப்பந்ததாரா்களை டெண்டா் கோரச் சொல்லுங்கள். 138 நகராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ள ஆன்லைன் மூலம்தான் ஒப்பந்தம் கோரப்படுகிறது. குறைவான தொகை கோருபவா்களுக்கு நாங்கள் ஒப்பந்தம் தருகிறோம்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது 11 ஒப்பந்ததாரா்கள் உள்ளனா். மு. சுதா்ஸன் (துணைத் தலைவா்): நகரத்தில் குப்பைகளை சரியாக அள்ளுவதில்லை. வேலைக்கு வராதவா்களின் ஊதியத்தை அன்று வேலை பாா்க்கக் கூடிய அனைவருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள், மேலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி