திருவாரூரில் மோடி அரசு வேண்டாம் என ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என உடுக்கை அடித்து பொதுமக்கள் மத்தியில் நூதன பிரச்சாரம் நடைபெற்றது.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் பொதுக்கூட்டங்கள் பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர் பகுதியில் மத்திய அரசின் அவலங்களை குடுகுடுப்பைக்காரர் போன்று வேடமிட்டு ஒன்றிய அரசு தொடர்ந்து கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என உடுக்கை அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து திமுக அரசு பெண்களுக்கு வழங்கப்படும் 1000 நிதி, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் போன்றவற்றை கூறி திமுகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.